இரவு நேரத்தில் சாலையோரம் தனியாக நின்றிருந்த +2 மாணவி : கடவுள் போல வந்த எஸ்.பி.. நடந்தது என்ன?!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 10:04 pm

தனியாக இருந்த மாணவி, தனது காரில் அழைத்து சென்று வீட்டில் விட்ட வேலூர் எஸ்.பிக்கு பாராட்டுகள் குவிகின்றது.

வேலூர் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்தும், மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் இன்று (14.12.2022) மாலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஓட்டேரி ஏரி, அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த Sp ராஜேஷ் கண்ணண் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்த மாணவி தன்னுடைய பெயர் சினேகா என்றும் வேலப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டுக்கு அழைத்து செல்ல யாரும் வராததால் இங்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைக்கேட்ட Sp ராஜேஷ்கண்ணன், மாணவியை தனது காரில் அமர வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளவிமேட்டில் உள்ள அந்த மாணவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது பெற்றோரை வரவழைத்து மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.

வீட்டில் வேலை இருந்ததால் மாணவி அழைக்க தாமதமானதாக பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் மாணவிகளை இதுபோன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தினார்.

அப்போது மாணவி மற்றும் பெற்றோர் sp ராஜேஷ்கண்ணனுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள பொது மக்களிடம் இங்கு காவல் துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா?, மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தனியாக தவித்த பள்ளி மாணவியை Sp பாதுகாப்பாக காரில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?