பொதுஇடங்களுக்கு செல்வோருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம் : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடி அறிவிப்பு

Author: Udhayakumar Raman
4 December 2021, 5:01 pm
Quick Share

புதுச்சேரி : பொதுஇடங்களுக்கு வருபவர்களிடம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்கள் கேட்கும் நடவடிக்கை நடைமுறைபடுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் சந்திப்பு கருத்தரங்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தராஜன், புதுச்சேரியில் விமான சேவையை துரிதப்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், புதுச்சேரியை சுற்றுலாவின் சுருக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்த வகை கொரோனாவாக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம், எனவே அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய அவர், புதுச்சேரியில் பொது இடங்களுக்கு வருவோர் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆவணங்கள் கேட்க நடவடிக்கை நடைமுறை படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 247

0

0