நடைபாதை வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 இளைஞர்கள் கைது

Author: Udhayakumar Raman
23 October 2021, 9:03 pm
Quick Share

சென்னை: நடைபாதை வியாபாரியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் 44 இவர் எம்.கே.பி நகர் கிழக்கு அவென்யு சாலை பகுதியில் நடைபாதையில் துணி கடை வைத்துள்ளார். இரவில் வேலை முடித்து விட்டு கடையை எடுத்து வைக்கும் போது அவ்வழியாக வந்த 2 பேர் மெய்தினிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே அவரை அடித்து அவரிடம் இருந்து 2000  ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர். இது குறித்து மெய்தீன் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேர் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற தக்காளி வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 199

0

0