சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலி : 3 பேர் படுகாயம்…

Author: kavin kumar
19 February 2022, 6:09 pm
Quick Share

வேலூர் : ஆந்திர தமிழக எல்லையோரம் சாலையோரம் உள்ள மரத்தின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள சைணகுண்டா சோதனைச் சாவடி அருகே ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியில் இருந்து சொகுசு காரில் 5 பேர் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சைனகுண்டா அருகே சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்து உள்ளது. இதனால் நிலை தடுமாறிய கார் அருகே உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த பலமநேரி பகுதியை சேர்ந்த ஜெயசிம்மா (26), மற்றும் அவரது உறவினரான உபேந்திரா (46) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் லோகேஷ், வம்சிகிருஷ்ணா, நானி (எ) மகேஷ் ஆகிய 3 பேரும் படுகாயமடைந் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 680

0

0