குமரி மாவட்ட மீட்புப் பணிகளுக்காக 20 கமாண்டோ வீரர்கள் வருகை…!

15 May 2021, 8:44 pm
Quick Share

கன்னியாகுமரி: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளுக்காக 20 சிறப்பு கமாண்டோ வீரர்கள் வந்தனர்.

அரபிக்கடலில் உருவான டவ்டே புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது .இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதோடு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீட்பு பணிகளுக்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையத்தில் உள்ள 110 அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்புப் பணிக்கு எஞ்சினுடன் கூடிய ரப்பர் மீட்பு படகுகள், லைப்பாய், லைப் ஜாக்கெட், சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்கூபா நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் மேலும் கூடுதலாக விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 4 மீட்பு வாகனங்கள் 120 சிறப்பு கமாண்டோ வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து குளித்துறை, ஆற்றூர், ஏழுதேசம் போன்ற வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு கருவிகளை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணபாபு, உதவி மாவட்ட அலுவலர் இம்மானுவேல், நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை ஆகியோர் பார்வையிட்டனர்.

Views: - 99

0

0