மது கொடுத்து 20 வயது இளம்பெண் காரில் வைத்து கூட்டு பலாத்காரம் : குற்றவாளிகளுக்காக வரிந்து கட்டி பேசிய திமுக நிர்வாகி… இறுதியில்?

Author: Babu Lakshmanan
9 September 2021, 7:56 pm
Kanji rape - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் அருகே காரில் வைத்து 20 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் டூ படித்த அவர்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து செல்லும் பணிகள் வீதியை சேர்ந்த குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும், செல் நம்பர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற விபரங்களை அளித்தால் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இதனை அந்தப் பெண்ணும் நம்பி அனைத்தையும் கொடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணை காதலிப்பது போல் பொய்யாக நடித்து, உங்களுடைய பூர்வீக சொத்துக்கள் உள்ள மேல்கதீர்பூர் கிராமத்துக்கு சென்று வருவோம் என கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதையை கலந்து குடிக்க வற்புறுத்தியதால், அந்த இளம் பெண்ணும் குடித்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு போதை ஏறியவுடன் தன்னுடைய நண்பர்களான ஆண்டிசிறுவள்ளூர் பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபநேசன் (29), ஓரிக்கை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (24), காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வீதியை சேர்ந்த அஜித் (23) மற்றும் காமராஜ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து மேல்கதிர்பூரிலுள்ள தன்னுடைய பம்பு செட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.

நான்கு நண்பர்களும் அந்த இடத்துக்கு வந்தவுடன் அந்த இளம்பெண்ணை காரில் வைத்து ஒருவர் பின் ஒருவராக கற்பழித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் வலி தாங்க முடியாமல் காரின் கண்ணாடியை ஓங்கி ஓங்கி அடித்து உள்ளார். விவசாய வேலை செய்துவிட்டு அந்த வழியே சென்ற பெண்கள் காரில் இருந்து சத்தம் வருவதை கண்டு காரை திறந்து பார்த்தனர். காரின் உள்ளே நிர்வாண கோலத்தில் அந்த இளம் பெண்ணும் மற்ற இரண்டு நண்பர்களும் இருந்துள்ளனர்.

பம்பு செட் அருகே போதையில் இருந்து குணசீலன் பொதுமக்கள் கூட்டம் கூடிய உடன் சாவியை தூக்கி ஜெபநேசன் இடம் வீசி உள்ளார். அதை பெற்றுக்கொண்ட ஜெபநேசன் அந்தப் பெண்ணுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி தப்பினார்.

மற்ற நான்கு நண்பர்களையும் அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க பாய்ந்தனர். அப்போது அந்த இடத்தினை குத்தகை எடுத்துள்ள திமுக கட்சியை சேர்ந்த கிளை செயலாளர் கோதண்டன் மற்றும் திமுகவை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் ஆகியோர் சமாதானம் பேசி அந்த நான்கு பேர்களையும் விடுவித்துள்ளனர்.

அங்கிருந்து பைக்கில் தப்பிய நான்கு நண்பர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட அந்த இளம்பெண் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தன்னை 5 பேர் சேர்ந்த கும்பல் மாறி மாறி கற்பழித்ததாக புகார் அளித்துள்ளார்.

புகாரை கேள்விப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அந்தப் பெண்ணிடம் நேரில் விசாரித்து விட்டு பாலியல் பலாத்காரம் செய்த மேல் கதிர்பூர் இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உறுதி செய்துகொண்டார். அதன்பேரில் வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், மற்றும் தொழிலதிபர் குணசீலன் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்து, பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காமராஜ் என்பவன் தப்பிஓடி தலைமறைவாக உள்ளார்.

கோவில்கள் நிறைந்த புண்ணிய ஸ்தலமான காஞ்சிபுரத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ள திமுக கட்சியின் ஆதரவாளர்களான நான்கு நண்பர்களும் சேர்ந்து, இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை கொடுத்து மாறி மாறி கற்பழித்த விஷயம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 583

0

0