2455 பேர் டிஸ்சார்ஜ், 1420 பேருக்கு தொற்று பாதிப்பு..! : கோவையில் இன்றைய கொரோனா நிலவரம்

16 June 2021, 8:24 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருபவர்களை விட தொற்று பாதிப்பு குணமாக வீடுதிரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது.அதன்படி, இன்று 1420 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 2455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால்

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.தற்போதையை நிலவரப்படி கோவையில் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 14,396 ஆக உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்தி 6 ஆயிரத்து 782 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று 28 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதை தொடர்ந்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1806 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 154

0

0