60 வயது நபருடன் 6 பீர் குடித்த 27 வயது இளம்பெண் லாட்ஜில் மர்ம மரணம்!

Author: Hariharasudhan
26 November 2024, 1:29 pm

சென்னை வேளச்சேரியில் 60 வயது முதியவருடன் தங்கியிருந்த 27 வயது பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை, வேளச்சேரி – தரமணி 100 அடி சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இங்கு 60 வயது முதியவர் ஒருவர், 27 வயது இளம்பெண் உடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில், இந்த இளம்பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக முதியவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விசாரணையில், சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோதி (60). இவருக்கு வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சசிகலா (50) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட, கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த அவரது 2வது மகள் ரம்யா (27) உடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் ரம்யாவும், ஜோதியும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். முன்னதாகவே, ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இதில், அன்று இரவு ரம்யா 4 பீர் குடித்துள்ளார்.

Lodge in Velacherry

பின்னர் இருவரும் தூங்கி இருக்கிறார்கள். அப்போது, நள்ளிரவில் எழுந்த ரம்யா, தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஜோதியிடம் கூறி உள்ளார். அதற்கு டாக்டரிடம் செல்வோமா என முதியவர் கேட்க, வேண்டாம் என ரம்யா கூறினாராம். இதனையடுத்து, காலையில் மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்தநிலையில், ரம்யா குளித்துவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

அப்போது, ரம்யாக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து ரம்யா உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தெரியவரும் என வேளச்சேரி போலீசார் தெரிவித்தனர். அதேநேரம், அவர் அருந்திய பீர் பாட்டிலை சோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!