கோவிஷீல்டு தடுப்பூசிகள்: புனேவில் இருந்து 3.73 லட்சம் டோஸ்கள் சென்னை வருகை..!!

Author: Aarthi Sivakumar
3 August 2021, 11:43 am
Quick Share

சென்னை: புனேவில் இருந்து 3.73 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து வழங்கி வருகிறது. கொரோனா அச்சம் காரணத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தினமும் சராசரியாக 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுவதால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் சில தினங்களிலேயே தீர்ந்துவிடுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 3 லட்சத்து 73,600 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம்சென்னைக்கு வந்தன.

விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்குகொண்டு சென்று மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பினர்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. ஒருவருக்கு இரண்டு தவணை தடுப்பூசிபோட வேண்டும் என்பதால் 12கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. இதுவரை 2 கோடியே 25லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் 9 கோடியே 75லட்சம் தடுப்பூசி தேவையுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 263

0

0