செங்கல் சூளைகளில் தொடர் இரும்பு திருட்டு: மைனர் சிறுவன் உள்பட 3 பேர் கைது..!!

Author: Rajesh
24 April 2022, 9:03 am
Quick Share

கோவை: தடாகம் பகுதியில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை திருடி வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதி வீரபாண்டி புதூரை சேர்ந்தவர்கள் செல்வம்(19), சிவகுமார் (36), மற்றும் 16 வயது சிறுவன்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் மூடப்பட்டு இருக்கும் செங்கல் சூளைகளில் உள்ள பழைய இரும்பு மற்றும் வயர்களை(செம்பு கம்பிகளுக்காக) திருடி விற்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் சேம்பர் ஒன்றில் இரும்பு கம்பிகளை திருட முற்படும்போது அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே திருடி வைத்திருந்த 11 ஆயிரம் மதிப்புள்ள இரும்புக் கம்பிகள் உட்பட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை அடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வம் மற்றும் சிவகுமார் சிறைக்கும் 16 வயது சிறுவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Views: - 603

0

0