பள்ளி மாணவிகள் முன்பு பைக்கில் சீன் போட்ட புள்ளிங்கோஸ்… பிடித்து ஜெயிலில் போட்ட போலீஸார்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
17 November 2023, 4:38 pm

அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி வேகமாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி பூசப்பதட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித், நல்லூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) ஜெயராஜன், மற்றும் 17 வயது இளஞ்சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மாதிரியான பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம், அதி பயங்கரமாக சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து, அவர்களின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்றும், மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://player.vimeo.com/video/885601028?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!