அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து.. கூச்சலிட்ட பயணிகள் : பைபாஸ் சாலையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 12:43 pm

அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து.. கூச்சலிட்ட பயணிகள் : பைபாஸ் சாலையில் பரபரப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிகோவில் ரிங்ரோடு வழியாக செங்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன்பாக அதிவேகமாக சென்ற பைக் திடிரென சாலையில் நடுவே சென்றபோது அதன்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.

பைபாஸ் சாலை என்பதால் அரசு பேருந்து பிரேக் பிடித்த அடுத்த நொடியிலயே பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்தும் அதன் பின்னால் வந்த திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தால் நல்வாய்ப்பாக ஓட்டுனர்களும், பயணிகளும் காயமின்றி தப்பிய நிலையில்்விபத்து ஏற்பட்டபோது பயணிகள் அச்சத்தின் காரணமாக கூச்சலிட்டனர்.

மேலும் படிக்க: பின்னணி பாடகர் வேல்முருகன் கைது : மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் அத்துமீறல்.!!

மூன்று பேருந்துகளும் அடுத்தடுத்து மோதியதில் நடுவே சென்ற தனியார் பேருந்து முன் மற்றும் பின் பகுதிகளிலும் பலத்த சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கியது.

இதனால் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் பேருந்துகள் மோதிய விபத்து குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை பைபாஸ் சாலையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சென்ற மூன்று பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?