வாளையார் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி: உடல்களை தேடும் பணி தீவிரம்..விடுமுறை கழிக்க சென்றபோது விபரீதம்..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 6:40 pm
Quick Share

கோவை: வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது வாலையார் அணை. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர்கள் சஞ்சீவ், ராகுல், பூர்னேஷ் இவர்கள் 3 பேரும் இன்று காலை பாலக்காடு மாவட்டத்திலுள்ள வாளையார் அணைக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். பிறகு அவர்கள் 3 பேரும் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஏற்பட்ட சுழல் காரணத்தினால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப் பார்த்த அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாலக்காடு தீயணைப்புத் துறைக்கும் வாளையார் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 113

0

0