ஒரே நாளில் 3 பேர் கொலை.. ‘ஆப்‘ ஆன சென்னை காவல்துறையினரின் ‘ஆபரேஷன்‘!!

Author: Udayachandran
2 August 2021, 7:30 pm
Chennai Murder - Updatenews360
Quick Share

சென்னை : மயிலாப்பூரில் பட்டப்பகலில் இளைஞர்வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மீன்பிடித் தொழிலாளியாக உள்ளார். பல்லக்குமா நகரில் உள்ள கேனால் பங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக் கவ்நத சரவணனை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து கொலையாளிகள் தப்பிச் செல்வதை பார்த்த மயிலாப்பூர் தலைமை காவலர் விஸ்வநாதன் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் விரட்டி சென்று இருவரை பிடித்தனர்.

இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதன் நோக்கம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பல நாட்களாக பழிவாங்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதில் முன்விரோதம் காரணமாக டோரி மணி என்ற மணிகண்டனை 2020ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டியுள்ளார் சரவணன், இதனால் அவரை பழி வாங்க காத்திருந்த எதிராளிகள் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் ஒரே நாளில் சென்னையில் ஐசிஎஃப் பகுதியில் அலெக்ஸ் என்பவரும், வண்ணாரப்பேட்டை பகுதியில் பீட்டர் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சம்பவங்களை தடுக்க புதுப்புது ஆபரேஷன்களுக்கு காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் திட்டமிட்டுள்ள நிலையிலி தலைநகரை தெறிக்க வைத்த கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 197

0

0