கோவையில் 40 வயதுக்கு மேற்பட்ட திருமணமான 3 ஆண்கள் அடுத்தடுத்து மாயம் : காவல் நிலையத்தில் மனைவிகள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 2:11 pm
Coimbatore Mans Missing - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் திருமணமான 3 ஆண்கள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43). கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி இவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுள்ளார்.

மேலும், மாலை 6 மணிக்கு தனது மனைவி புஷ்பாவுக்கு போனில் அழைத்து விடு திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை தேடி வருகின்றனர்.

அன்னூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 44). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். இந்த சூழலில் நேற்று வீட்டில் யாரிடமும் கூறாமல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி தனலட்சுமி. லோகநாதனைப் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமானவரை தேடி வருகின்றனர்.

பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). உடல் நலக்குறைவால் இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி பச்சாபாளையம் முருகன் கோவில் அருகே அமர்ந்திருந்த இவர் திடீரென மாயமானது,

இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வடிவேலை தேடி வருகின்றனர்.

Views: - 407

0

0