வாவ்… இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்.. விண்ணில் பாய்ந்த 3 செயற்கைக்கோள்கள்..!

Author: Vignesh
24 August 2024, 9:22 am

தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்திய நிறுவனம் மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI ஒன் என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன்

கேளம்பாக்கம் அருகே வங்கக்கடலை ஒட்டிய பகுதி இருந்து வானில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயர கொண்ட இந்த ராக்கெட் வானில் 80 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. வழக்கமாக செயற்கைக்கோளை பயன்படுத்தபின் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், RHUMI மீண்டும் பயன்படுத்தப்படும்.

செயற்கைக்கோள் ஏவிய பிறகு மீண்டும் பூமி திரும்பும் வகையில், ராக்கெட்டுடன் பாராசூட் இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் ஒரே ராக்கெட் பயன்படுத்தி பலமுறை செயற்கைக்கோள்களை ஏவலாம். இதனால், செலவு மிச்சம் என்பது இந்து திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?