கேரளாவிற்கு 3 டன் ரேஷன் அரிசி கடத்தல் : ஓட்டுநர் கைது!!

By: Udayachandran
11 October 2020, 6:44 pm
Ration Rice Seized - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திருநெல்வேலியில் இருந்து களியக்கா விளை வழியாக மினி லாரியில் பதுக்கி கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் – க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கூண்டு கட்டிய மினி லாரியை சோதனை செய்தபோது அந்த லாரியில் சிறு சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டதுடன் வாகனத்த்தை ஓட்டி வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நக்கீரனை கைது செய்தனர்

Views: - 45

0

0