11 ஆயிரத்தை கடந்த செங்கல்பட்டு…! இன்றும் 305 பேருக்கு கொரோனா…!

24 July 2020, 9:46 am
corona virus new 13- updatenews360
Quick Share

சென்னை: செங்கல்பட்டில் மேலும் 305 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சமும் குறையவில்லை. நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

தலைநகர் சென்னை தான் தமிழக அளவில் அதிக கொரோனா தொற்றுகள் கொண்ட மாவட்டமாகும். அதை தொடர்ந்து மிகுந்த பாதிப்பை சந்தித்து இருப்பது செங்கல்பட்டு. தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையில் இருந்து கொரோனா தொற்று பின்னர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

அம்மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,888 என்று பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய காலை நிலவரப்படி கொரோனாவால் மேலும் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11,193 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 214 பேர் உயிரிழக்க, 2,688 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.