தமிழகத்தில் 35 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதில்லை: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!….

Author: Aarthi
9 October 2020, 5:55 pm
radhakrish - updatenews360
Quick Share

தமிழகத்தில் 35 சதவிகித மக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

சென்னையில் ஒரு சில பகுதிகள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டஙக்ளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மக்களிடம் முகக்கவசம் பயன்படுத்துவது குறைந்து வருவதால், அபராதம் விதிப்பதோடு, அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா அறிகுறி வந்தவுடன் பரிசோதனை செய்துகொண்டால் தான், நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை மக்கள் சாதாரண காய்ச்சல் என நினைத்து முகக்கவசம் அணியாமல் உள்ளனர் எனவும், முகக்கவசம் அணியாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலையும் தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 35 சதவிகித மக்கள் முகக்கவசம் அணியாத நிலை இருக்கிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Views: - 51

0

0