தமிழகத்தில் 3வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது: 20 ஆயிரம் முகாம்கள் ஏற்பாடு..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 8:20 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 3வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்நிலையில் 3வது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம் தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Views: - 104

0

0