பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தை : தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம்..!

9 September 2020, 9:35 am
Quick Share

தென்காசியில் பிறந்த குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கால் படங்கள் திரையிடப்படாத சூழலில் தியேட்டர் மூடப்பட்டுள்ளது.

அந்த தியேட்டரின் வளாகத்தில் குழந்தை ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

அதில், எரிக்கப்பட்ட குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆகியுள்ளது எனவும் ஆண் குழந்தை எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தை தியேட்டர் வளாகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0