4 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

5 November 2020, 1:04 pm
rainy-updatenews360
Quick Share

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 4 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெருப்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0