சூறாவளி காற்றுக்கு சாய்ந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் வாழைகள் : விவசாயிகள் வேதனை!!

14 May 2021, 3:42 pm
banana Damaged- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரண்டு கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காற்றுக்கு 4000 வாழைகள் சாய்ந்து நாசமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லநாயக்கனூர், மில்மேடு, காளிகுளம் ஆகிய கிராமங்களில் பெரும்பான்மையான விவசாயிகள் கதளி, தேன்வாழை ஆகிய ரகங்கள் கொண்ட வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

அறுவடைக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று மாலை திடீரென லேசான மழையும், பலத்த சூறாவளி காற்றும் அடித்தது. இதில் மேற்கண்ட கிராமங்களில் உள்ள வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து நாசமானது.

வாழைத்தார் ஒன்று 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாக கூடிய நிலையில் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானதால் தங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுத்து தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 123

0

0