விடுமுறை நாளில் சோகம்… ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2025, 1:06 pm

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாரதப்புழாவில் கபீர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார்.

குழந்தைகள் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீர் ஓட்டத்தில் சிக்கி உள்ளனர்.

இதையும் படியுங்க: புரிஞ்சுக்கோங்க சார்.. அது நீங்க இல்ல.. வைரலாகும் பார்த்திபன் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இதைப் பார்த்த கபீர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் நான்கு பேரும் கரை திரும்ப முடியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.

family were swept away in the river

இவர்களுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Four members of a family died in Bharatapuzha

இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் வந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் நான்கு பேரையும் மீட்டுள்ளனர்.

4 members of the same family were swept away in the river

இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!