சாக்கடையில் கிடந்த 4 மாதமே ஆன கரு : திருப்பூரில் அதிர்ச்சி!!

9 October 2020, 6:02 pm
Tirupur Fetus Rescue- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் பகுதியில் 4 மாத கருவை சாக்கடையில் வீசி சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மேற்கு பல்லடம் என்ற பகுதியில் இன்று மாலை சாக்கடையில் இருந்து 4 மாதமே ஆன கரு கண்டெடுக்கப்பட்டது.

மேற்கு பல்லடம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டருந்த பெண் ஊழியர் ஒருவர் , சாக்கடையை சுத்தம் செய்யும் போது 4 மாத கரு கிடந்ததை பார்த்துள்ளார்.

உடனே பல்லடம் காவல்துறையினருக்கும் , சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தார். அதிகாரிகள் வந்து சாக்கடையில் இருந்த 4 மாத கருவை மீட்டனர். மேலும் இந்த கருவை சாக்கடையில் தூக்கி வீசி சென்றவர்கள் யார் எனவும் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 39

0

0