4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை : அதிர வைத்த பொள்ளாச்சி.. 78 வயது முதியவரின் கோரமுகம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 6:47 pm

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 முதியவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி அவர் வேலைக்கு செல்லும் போது தனது 3 1/2 வயது பேத்தியையும் உடன் அழைத்து சென்றார்.

பேத்தி மாடியில் விளையாடி கொண்டு இருக்க அவர் வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டு உரிமையாளரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த முன்னாள் மின் ஊழியர் முருகன் (78) என்பவர் சிறுமியை அறைக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

வலி தாங்காமல் கதறிய சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அவரது பாட்டி சிறுமியை முதியவரிடம் இருந்து மீட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து முருகனை செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?