சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை..!!

11 June 2021, 3:18 pm
Quick Share

திண்டுக்கல்: தனியார் சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ஜன்னல் கம்பிகளை அறுத்து ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள மாலைப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார், இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர் தனது கணவருக்கு உதவியாக சோப்பு கம்பெனிக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு கம்பெனியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவு திறந்து பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

பீரோவில் இருந்த ரூ.23 லட்சம் ரொக்க பணம்மற்றும் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவில் கம்பிகளை அறுத்து உள்ளோ புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவர் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. திருடர்கள் அந்த வீட்டில் இருக்கும் ஒரு கண்காணிப்பு கேமராவை, வேறு திசையில் திருப்பி வைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Views: - 162

0

0