இது உங்களுக்கே ஓவரா தெரியல.. மீண்டும் சிக்கலில் சிக்கிய 40 Story அஸ்வின்.. ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!

Author: Rajesh
22 May 2022, 2:01 pm
Quick Share

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகி அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்தவர் தான் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது.

அஸ்வின் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும் போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தனர்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தோல்விக்கு அஸ்வினுடைய ஆணவப் பேச்சு தான் காரணம் என படக்குழு, சினிமா வட்டாரத்தில் அப்போது பேச்சுக்கள் அடிப்பட்டது. இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘செம்பி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் அஸ்வின் தன்னுடைய பெயரை ஏ.கே என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள், இது உங்களுக்கே ஓவரா தெரியல. ஏ.கே என்றால் அது அஜீத் மட்டும் தான். பப்ளிசிட்டிக்காக இப்படி ஏ.கே என அஜீத்தின் பெயரை பயன்படுத்தியதாக பலர் சமூகவலைத்தளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர்.

Views: - 632

0

0