இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்கள்: இன்று தாயகம் திரும்பினர்…!!

19 January 2021, 5:00 pm
TN fishers - updatenews360
Quick Share

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் இன்று தாயகம் திரும்பினர்.

கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 7 மீனவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 40 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 விசைப்படகு மற்றும் அதிலிருந்த 29 மீனவர்களும் அடங்குவர்.

இலங்கையிலுள்ள நெடுந்தீவு, மன்னார் மற்றும் குதிரைமலை கடற்பகுதிகளில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் இலங்கையிலுள்ள கொரோனா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை எல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 40 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றங்கள் கடந்த வாரம் விடுதலை செய்தன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு விமான நிலையத்திலுருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் 40 பேரும் அவரவர் மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Views: - 0

0

0