கோவையில் 40 ஆண்டுகள் பழமையான கோவில்கள் இடிப்பு… தர்ணா போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது!!

13 July 2021, 11:33 am
temple demolished - updatenews360
Quick Share

கோவை : கோவையில் 40 ஆண்டுகள் பழமையான கோவில்கள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில், குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டுள்ளன.

இதில் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர். அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டன. இதனிடையே அப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்துக்கு மேற்பட்ட கோயில் உள்ளது. இக்கோயிலை இடிக்க இன்று காலை மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இடிக்க முன்வந்தனர்.

இதையடுத்து கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தண்ணன் குளம் சுண்டப்பாளையம் சாலை சிவராம் நகரில் பொதுமக்கள் கோயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் கோவில்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. கோவில் இடிக்கப்பட்டு கோபுர கலசங்கள் தரையில் விழும் போது மக்கள் அழுதனர். வளர்ச்சி பணிக்காக கோவில் இடிக்கப்பட்டது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 207

0

0