சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் விதமாக 400 கி.மீ. நடைபயணம்… காந்தியவாதிகளை வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி..!!

Author: kavin kumar
14 December 2021, 4:50 pm
Quick Share

புதுச்சேரி: சுதந்திரத்திற்காக போராடியர்வர்களை நினைவு கூறும் விதமாக சென்னிமலையில் இருந்து 400 கி.மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட புதுச்சேரி வந்தடைந்த காந்தியவாதிகளை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து காந்திய இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கருப்பையா உள்ளிட்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், 400 கி.மீட்டர் நடைபயணமாக பயணித்து நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களையும், நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறுவும், நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட மகாகவி பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் நடைபயணமாக புதுச்சேரிக்கு வந்தவர்களை முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் இவர்களை புதுச்சேரி தமிழ்சங்கமும் பாராட்டி கெளரவித்தது.

Views: - 387

0

0