அனுமதி கிடைக்கலனாலும் பாராம்பரியத்த விடமாட்டோம் : ஒரே நேரத்தில் பொங்கலிட்ட பெண்கள்!!

27 February 2021, 3:08 pm
Kumari Pongal-Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குமரியில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு செய்தனர்.

கேரள மாநிலத்தில் கொரோன பரவி வரும் நிலையில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கு இந்த ஆண்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கு செல்ல முடியாத கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பெண் பக்தர்கள் ஏராளமானோர் தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதியில் 400 மேற்பட்ட பெண்கள் திரண்டு திருவனந்தபுரம் ஆற்றுங்கால் கோவிலில் நடைபெறும் பாரம்பரிய முறைபடி பொங்கல் வைத்தனர்.

பண்டார அடுப்பு பற்றவைக்கப்பட்டு பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். மேலும் பொங்கல் நைவேத்யம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Views: - 12

0

0