சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 419 பேர் பாதிப்பு: 80 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

Author: Aarthi Sivakumar
2 August 2021, 1:30 pm
Quick Share

சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்பும், உயிரிழப்பும் ஓரளவு குறைந்து வருகிறது. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 419 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது 80 பேருக்கும், மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். 10 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

is mucromycosis aka black fungus is contagious

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் விலை உயர்ந்த ஊசிகள் குளுக்கோஸ் மூலம் செலுத்தி தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சையில் இருந்து குணம் அடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 80 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Views: - 242

0

0