தமிழகத்தில் இயல்பை விட 43% அதிக மழைப்பொழிவு: சென்னை வானிலை மையம் தகவல்..!!
Author: Aarthi Sivakumar7 November 2021, 3:35 pm
சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 23 செண்டி மீட்டர். ஆனால் தற்போது 33 சென்டிமீட்டர் பெய்துள்ளது.
இது இயல்பைவிட 43 சதவிகிதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் இயல்பு அளவு 38 செமீ. ஆனால் பெய்துள்ளது 48 செமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இயல்பை விட 26 % அதிகம். கடந்த வாரம் வரை இயல்பை விட குறைவாக மழை பதிவாகி இருந்த நிலையில், இந்த வாரத்தில் நிலைமை மாறியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 373
0
0