நண்பனை கொலை செய்தவனை 6 மாதம் காத்திருந்து பழிக்கு பழிவாங்கிய கொடூரம் : 5 சிறுவர்கள் கைது!!

19 November 2020, 3:14 pm
Murder Arrest - Updatenews360
Quick Share

திருச்சி : கடந்த மே மாதம் நடந்த கொலைக்கு காரணமானவர்கள் 6 மாதமாக காத்திருந்து கொலை செய்த 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியில் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன்(வயது 19) (எ) பிரகாஷ் என்பவர் ஸ்ரீரங்கம் ரயில்வே தண்டவாளம் அருகே படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதே பகுதியை சேர்ந்த மண்டை சூடு என்கிற விக்னேஸ் மற்றும் உதயா, கோகுல், மாரி ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் மேற்கண்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் பெயிலில் வெளியே உள்ளனர். இந்நிலையில் மண்டை சூடு விக்கியின் கூட்டாளியான மாரி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவர் தனது செல்போனை பழுதடைந்ததால் சரி செய்ய சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த இறந்த போன விக்னேஸ்வரனின் நண்பரும் கூட்டாளிகளும் ஆன திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த சித்திக் (வயது 16) என்பவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது சித்திக் அவரது கூட்டாளிகளை வரவழைத்து மாரியை கத்தியாலும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த மாரி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மாரியை சரமாரியாக தாக்கிய சித்திக் மற்றும் அவரது கூட்டாளி கவுதம்(வயது 17) ஜீவா(வயது 16) சண்முகம்(வயது 17) சந்தோஷ்(வயது 16) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0