கோவையில் இன்று 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு..! எத்தனை பேருக்கு பாதிப்பு?

20 July 2021, 8:55 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இன்னும் 2 ஆயிரத்து 648 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இன்று 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 328 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 2 ஆயிரத்து 648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்படுபர்வகளை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை கோவையில் அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 140பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 904 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்து 39 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 161

0

0