விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர்…குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 12:30 pm
Quick Share

கோவை: நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இந்த பாரத் பந்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. கோவையை பொறுத்தவரை 30 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பாரத் பந்த்-தின் ஒரு பகுதியாக அனைத்து தொழிற்சங்கங்கள், திமுக கூட்டணி கட்சிகள், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை பேரிகேட் வைத்து போலீசார் தடுத்து சுமார் 500 பேரை கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கோவை ரயில் நிலையம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Views: - 149

0

0