சிமெண்ட் ஆலையில் வெடிகுண்டு வைத்த 6 பேர் கைது: கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் நிபுணர்கள் முன்னிலையில் செயலிழக்க வைப்பு

23 June 2021, 9:20 pm
Quick Share

நெல்லை: மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் நெல்லையில் உள்ள பிரபல சிமெண்ட் ஆலையில் வெடிகுண்டு வைத்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் நிபுணர்கள் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல சிமென்ட் தொழிற்சாலையில் நேற்றையதினம் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் கூறி மறுப்பவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலையின் துணைத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தாழையூத்து காவல் துறையினர் சிமெண்ட் ஆலையின் பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய சோதனை நடத்தியதில், இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் தொழிற்சாலை ஊழியர் உட்பட 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட இரண்டு பைப் வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டனர்.

நெல்லை தாழையூத்து பகுதியில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் வைத்து சிமெண்ட் ஆலையில் கண்டெடுக்கப்பட்ட பைப் வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யும் பணிகள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சிமெண்ட் ஆலை துணைத்தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வெடிகுண்டுகள் தேடும் பணி நடைபெற்று இரண்டு பைப் வெடிகுண்டுகள் சிமெண்ட் உற்பத்தி அழகில் இருக்கும் லிப்ட் பகுதியின் கீழ் புறத்தில் இருந்து எடுக்கப்பட்டு செயலிழக்கும் பணி நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஆலையில் வெடி குண்டு வைத்த ஆலை ஊழியர் உள்ளிட்ட 6 நபர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

Views: - 97

0

0