வேலூரில் கள்ள நோட்டு புழக்கம்; பல லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல்; 6 பேர் கைது

Author: Udhayakumar Raman
25 September 2021, 11:09 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கள்ள நோட்டுகள் மற்றும் அதன் மூல பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜீவா நகரில் சொந்த வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் பல மாதங்களாக சட்ட வீரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், இவர் வீட்டிற்கு இரவு நேரங்களில் சந்தேகப்படும் வகையில் மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும் திட்டமிட்ட குற்ற நுண் அறிவு பிரிவினர் கொடுத்த தகவல் அடிப்படையில், குடியாத்தம் டி.எஸ்.பி. தலைமையில் நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சரவணன் வீட்டை சுற்றி வளைத்து உள்ளே சென்று அங்கிருந்த சரவணன் உட்பட அவனது கூட்டாளிகளை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கள்ள நோட்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகள் கருப்பு மையில் பதப்படுத்தப்பட்ட நோட்டுக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சரவணன் உட்பட அவனது கூட்டாளிகள் 6 நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Views: - 386

0

0