ஒரே பைக்கில் 6 பேர் அலப்பறை : வாட்ஸ்அப் வீடியோவை வைத்து பிடித்தது போலீஸ்..!

5 March 2021, 5:40 pm
Quick Share

கோவை: கோவை சத்தி சாலையில் ஒரே பைக்கில் சென்ற 6 பேரை பிடித்த போலீசார் அவர்கள் அலப்பறை செய்ய பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை-சத்தி சாலை சரவணம்பட்டி அருகே ஒரே பைக்கில் இளைஞர்கள் 6 பேர் ஒய்யாரமாக பயணம் செய்தனர். அதோடு, செல்லும் வழியில் அலப்பறையாக குறும்புத்தனத்தை செய்தபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இவர்களின் செயலை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலானது. இதனை தொடர்ந்து, அந்த இளைஞர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விடியோவில் தெளிவாக தெரிந்த வாகன பதிவு எண்ணை கொண்டு அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து பிணையில் விடுவித்தனர். மேலும்,அந்த வாகனத்தை ஓட்டிய இளைஞர் பெயர் குகுலன் (31) என்பதும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கோவையில் பெயிண்டிங் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் அலப்பறைக்காக பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Views: - 193

1

0