இன்று மட்டும் 62 பேர் கொரோனாவுக்கு பலி…! ஒட்டுமொத்தமாக 1141 பேர் உயிரிழப்பு

29 June 2020, 9:59 pm
Quick Share

சென்னை: கொரோனாவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வழக்கம் போல் வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகத்தில் மேலும் 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் 2167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 2212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சென்னை தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். ஒட்டுமொத்த இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1141 ஆக உயர்ந்ததாகவும், இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply