21 வயது இளைஞரை கொலை செய்த 62 வயது முதியவர் : புதுச்சேரியில் அதிர்ச்சி!!

26 October 2020, 2:17 pm
Pondy Murder - Updatenews360
Quick Share

புதுச்சேரி : தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதால் முதியவரின் நியாயம் கேட்ட 21 வயது இளைஞரை முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை கங்கை அம்மன் கோயில் பகுதியில் வசிப்பவர் முத்து. கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவர் உடன் சென்று விட்டதால் இவர் தன் மகன் மற்றும் மனைவி உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வீட்டுக்கு எதிரே வசிப்பவர் முதியவர் விநாயகம் (வயது 62). இவருக்கும் முத்துவிற்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டு விநாயகம் முத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

அப்போது அருகே இருந்த முத்துவின் மகன் பிரதாப் (வயது 21) தன் தந்தையை ஏன் தகாத வார்த்தைகளால் திட்டுகூறிர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த முதியவர் வினாயகம் தான் மறைத்து வைத்திருந்த ஒரு அடி நீளமுள்ள கத்தியை எடுத்து பிரதாப்பின் மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஒடி உள்ளார்.

இதை பார்த்த பிரதாப்பின் நண்பர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதாப் உயிரிழந்தார்.

இக்கொலை சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த முதியவர் வினாயகத்தை கைது செய்துள்ளனர். தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டிய முதியவரை மகன் தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் முதியவர் கத்தியை எடுத்து வாலிபரை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..

Views: - 0

0

0