ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா பேருந்து விபத்தில் சோகம்… கோவையில் 2 பேர் சிகிச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 11:10 am

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.. சுற்றுலா பேருந்து விபத்தில் சோகம்… கோவையில் 2 பேர் சிகிச்சை!!

குன்னூர் பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர். 40″க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இவர்களில் ஒருவரான மூதாட்டி செல்லம்மாள் (75) என்பவர் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு கொண்டு வரப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவரை கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் குன்னூர் பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி செல்லம்மாவுக்கு தலை உள்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவரும் சிகிச்சைக்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டுள்ளார். எனவும் மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் வரும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க 25 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுமருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…