வீடு வீடாக சேலை விற்க சென்ற போது 7 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் : போக்சோவில் வியாபாரி!!

Author: kavin kumar
29 December 2021, 6:16 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலை வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (63) சேலை வியாபாரி. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சேலைகள் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் சேலை விற்பனை செய்யும் பொழுது தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேலை வியாபாரி ராஜாவை கைது செய்தார்.

Views: - 291

0

0