கட்டிடத்தில் குடி, கும்மாளம்.. கூலித் தொழிலாளிக்கு அடி, உதை : சிறுவன் உட்பட 7 இளைஞர்கள் கைது!!!
Author: Udayachandran RadhaKrishnan6 October 2021, 1:54 pm
கோவை : வேலை நடந்துவரும் கட்டிடத்தில் மது அருந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூலி தொழிலாளியை மதுபோதையில் கடுமையாக தாக்கிய சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் தங்கி கட்டிடவேலை பார்க்கும் திருவாரூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் குனியமுத்தூர் பகுதியில் கட்டிடவேலை செய்துவருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடித்து விட்டு வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த போது இளைஞர்கள் சிலர் அந்த கட்டிடத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதை பார்த்த அண்ணாதுரை வேலை நடந்துவரும் கட்டிடத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள், அண்ணாதுரையை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த அண்ணாதுரை முதலுதவி சிகிச்சைக்குபின் கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட, 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் அவர்கள் விஷ்னு, இளவரசன், அபிஷேக், சந்தோஷ், அபுதாஹிர், முருகன் என தெரிய வந்தது.
மேலும், இவர்கள் மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சினைகள் மேற்கொண்டு வருவதும், சம்பவத்தன்று அண்ணாதுரையை தாக்கியதை ஒப்புக்கொண்டதை அடுத்தும் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
0
0