கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் : வரும் 29ம் தேதி ஏலம் விடப்படும் என வடக்கு வட்டாரப் போக்குவரத்து அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 9:35 pm

கோவை : கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 29ம் தேதி நடைபெறுகிறது.

கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள வாகனங்கள் மார்ச் 29ம் தேதி திறந்தவெளி ஏலம் விடப்படவுள்ளதாக கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் வரி செலுத்தாத, விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாள்களாக உரிமை கோரப்படாமல் உள்ள இந்த வாகனங்கள் போக்குவரத்து கமிஷனர் சுற்றறிக்கையின்படி திறந்தவெளி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் மார்ச் 16 முதல் 24ம் தேதி வரை கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை முறித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை இணைத்து மார்ச் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். நடப்பு ஜி.எஸ்.டி. கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் விடப்படும் வாகனங்களை மார்ச் 16 முதல் 25ம் தேதி வரை அலுவலக நாள்களில் பார்வையிடலாம்.

துடியலூரில் உள்ள கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு திறந்தவெளி பொது ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!