74வது சுதந்திர தினம் : தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு..!

14 August 2020, 7:36 pm
flag salute - updatenews360
Quick Share

சென்னை : நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த 23 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், காவல்துறையினருக்கான 631 பெயர்கள் அடங்கிய விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் – 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.