77 நகரும் நியாய விலைக்கடை : அமைச்சர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கினார்!!
26 September 2020, 3:16 pmதிருப்பூர் : உடுமலையில் நகரம் நியாயவிலை கடையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்மா நகரும் நியாய விலைக்கடையை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் 77 நகரும் நியாய விலைக்கடை ஊர்தி தொடங்கப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக இன்று உடுமலையில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடங்கப்பட்டது.
இதில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் 15 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை உடுமலை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு பருப்பு சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.