8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

14 August 2020, 3:26 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

சென்னை: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒடிசா, மேற்குவங்க மாநில கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்னமும் நிலவி வருகிறது.

அதன் காரணமாக தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும். குறிப்பாக தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் 48 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டதுடன் காணப்படும். சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையானது அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும், குறைந்த அளவாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. கூடலூர் பஜார், பந்தலூர், ஹாரிசன் எஸ்டேட், நடுவட்டம் உள்ளிட்ட தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Views: - 0

0

0