கோதாவரி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர்கள் 8 பேர் மாயம்.. நண்பர் வீட்டு விஷேசத்துக்கு வந்த இடத்தில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2025, 12:48 pm

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மும்மிடிவரம் மண்டலத்தின் கமினி லங்கா அருகே கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற எட்டு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நிகழ்ந்தது.

காக்கிநாடா, ராமச்சந்திரபுரம், மற்றும் மண்டபேட்டாவிலிருந்து ஷெருல்லங்கா கிராமத்தில் நண்பனின் வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களில் 11 பேர் குளிக்க கோதாவரி ஆற்றில் இறங்கிய நிலையில், அவர்களில் எட்டு பேர் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்கள்

இதையும் படியுங்க: அரக்கோணம் வழக்கில் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு காக்கப்படுகிறதா? யார் அந்த சார்? இபிஎஸ் கேள்வி!

நண்பரின் வீட்டு விசேஷத்திற்கு வந்த நண்பர்கள், சிறிது நேரம் ஓய்வெடுக்க கோதாவரி ஆற்றுக்கு வந்து விபத்துக்கு உள்ளாகினர். ஆற்றில் ஆழமாக சென்ற நண்பரை காப்பாற்ற முயன்ற எட்டு பேர் ஒவ்வொருவராக சென்று நீரில் மூழ்கி காணாமல் போனார்கள்

உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் தண்ணீரில் செல்லப்பட்டு மாயமானவர்களை படகுகள் மூலம் தேடும் பணியை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துக்கத்தின் கடலில் மூழ்கியுள்ளன.

காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் வாசம்ஷெட்டி தெரிவித்தார். தேடுதல் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இந்த இளைஞர்கள் காக்கிநாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராந்தி, பால், சாய், சதீஷ், மகேஷ், ராஜேஷ், ரோஹித், மற்றும் மகேஷ் என அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கங்கவரத்தில் உள்ள ஷெருல்லங்காவில் தனது நண்பனின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த சமயத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது

  • dd next level movie sad collection report கலெக்சனில் மண்ணை கவ்விய டிடி நெகஸ்ட் லெவல்? இப்படி ஒரு நிலைமையா வரணும்!
  • Leave a Reply